Ads Area

கல்முனை கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்தமையால் பதற்றம்!

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடியனர்.

செவ்வாய்க்கிழமை (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாக வெளியேறுவதாகவும் தகவல் ஒன்று பரவியது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் ஆவியாகி சூடானதாக எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இறுதியாக உண்மை தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் நிலவிய சிறுபதற்றம் தெளிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe