(எம்.எம்.ஜபீர்)
உலகத்தையே அச்சுறுத்தும் இந்த கோரேனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் திண்டாடும் நிலையில் இலங்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இவ்வளவு தூரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையை உலக நாடுகள் ஜனாதிபதி தலைமையிலான இவ் அரசாங்கத்தினை பாராட்டுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனை அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மேலும் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியினர் அதனை அரசியலாக காட்டி தேர்தல் ஆணையாளர் ஊடாக தடுத்துவிட்டார்கள்; எனவே கோரோனா வைரஸ் தொற்று காலத்தில் எங்களுடைய நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டும் அதற்கு நன்றிக்கடனாக இருப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினை பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சியமைக்க பங்களிப்பு செய்வர்கள் என்ற நம்பிக்கையுள்ளது.