Ads Area

கத்தாரிலிருந்து விடுமுறை சென்றவர்கள் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் கத்தார் திரும்பலாம் என அறிவிப்பு.

கொரோனாவுக்கு முன்னர் கத்தாரிலிருந்து விடுமுறை மற்றும் ஏனைய காரணங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்குச் சென்ற கத்தார் வாழ் குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 01ம் திகதி முதல் மீண்டும் கத்தார் திரும்ப முடியும் என கத்தார் அரசு அறிவித்துள்ளதாக அந்  நாட்டின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான QNA நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கத்தாரில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்திட்டத்திற்கு ஏற்ப இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் 01ம்  திகதி முதல் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் என அனைவரும் கத்தாரிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்லவும் அதே போல் செல்லுபடியாகும் குடியிருப்பு விசாவை வைத்திருக்கும் வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் கத்தாருக்குள் உள்நுழையவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கத்தார் நாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனாா வைரஸ் தாக்கம் குறைந்தளவில் உள்ள நாடுகளுக்கு மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதுடன் கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்த நிலையில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுமே கத்தாருக்கும் அனுமதி்க்கப்படுவார்கள். இதனடிப்படையில் கத்தார் சுகாதார அமைச்சு குறைந்தளவான கொரோனா ஆபத்துக் கொண்ட நாடாக 40 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது, இதில் இந்தியா உள்ளடக்கப்படவில்லை இந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் மாத்திரமே கத்தாருக்கும் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். குறித்த பட்டியலில் இந்தியா உள்ளடக்கப்படாதுள்ள நிலையில் இந்தியர்களும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கத்தாருக்குல் நுழைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறைந்த ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியல் கத்தார் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்குல் உள் நுழையும் அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் விமான நிலையத்தில் வைத்து கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவும் உள்ளனர். கத்தார் நாட்டிற்குல் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குல்  முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி மூலம் - https://www.deshabhimani.com
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
செய்தி மூலம் -  https://www.livemint.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe