தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் நண்பர்கள் தற்போதைய சூழ்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கோ அல்லது இதர தேவைகளுக்கோ தாய்நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தங்கம் மற்றும் இதர விலை கூடிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி நஷ்டமடைந்து விடாதீர்கள்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் நண்பர்கள் தற்போதைய சூழ்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கோ அல்லது இதர தேவைகளுக்கோ தாய்நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தங்கம் மற்றும் இதர விலை கூடிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி நஷ்டமடைந்து விடாதீர்கள்.
அது மாத்திரமல்லாமல் தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவில் உயர்வடைந்திருக்கிறது, இலங்கையில் 24 கேரட் தங்கத்தின் ஒரு பவுனுக்கான விலை 1 இலட்சம் ரூபாய் வரைக்கும் சென்று கொண்டிருக்கின்றது, இதே நிலைதான் இந்தியாவிலும். தங்கத்திற்கான விலை சடுதியாக உயர்வடைந்துள்ள இந் நிலையில் தங்கம் புதிதாக வாங்குவதை விட இருக்கும் தங்கத்தை நல்ல விலையில் விற்பதே புத்திசாலித்தனமாகும்.
சவுதியில் இருக்கும் சகோதரர்கள் உணவு போன்ற இதர அத்தியாவசிமான பொருட்களை கொள்வனவு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை அவற்றுக்கும் 15 வீதம் வரி செலுத்தவே வேண்டும் இருந்தும் அவை குறைந்த அளவிலேயே இருக்கும் ஆனால் ஆடம்பட பொருட்கள், விலையுயர்ந்த பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்தால் அதற்கு வரும் மொத்த தொகைக்கும் சேர்த்து நீங்கள் 15 வீதமாக வரி செலுத்த வேண்டும். நீங்கள் சாதாரணமாக 2000 றியாலுக்கு ஒரு தொலைபேசி வாங்கினால் கூட அதற்கு 15 வீதம் வரியாக 300 றியால்கள் மேலதிகமாக வழங்க வேண்டும்.
தற்போது அறவிடப்படும் 15 வீதம் வரி இறுக்கமான நிலை தளர்வடைந்த பின்னர் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1 GRAM GOLD 24K | 217.81 | 218.69 | 217.64 | -0.63 |
GRAM 22K | 199.95 | 200.76 | 199.79 | -0.58 |
GRAM 21K | 190.58 | 191.36 | 190.43 | -0.55 |
GRAM 18K | 163.36 | 164.02 | 163.23 | -0.47 |
GRAM 14K | 127.42 | 127.94 | 127.32 | -0.37 |
GRAM 10K | 90.83 | 91.20 | 90.75 | -0.26 |
GRAM 6K | 54.45 | 54.67 | 54.41 | -0.16 |