Ads Area

சம்மாந்துறை இந்து சமயத் தலைவர்கள் மற்றும் அற நெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி.

ஐ.எல்.எம் நாஸிம் 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் தலைமையில்  சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து சமயத் தலைவர்கள் மற்றும் அற நெறி ஆசிரியர்களுக்கான  தலைமைத்துவ பயிற்சி நெறி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம் பெற்றது. 

இன் நிகழ்வில் வளவாளராக   அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்.மல்வத்தை ஜெயசக்தி அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறி பரமலிங்கம் குருக்கள்,அம்பாறை மாவட்ட செயலக இந்து காலாசார அபிவிருத்து உத்தியோகத்தர்கள் என்.பிரதாப்,கு.ஜெயராஜி சம்மாந்துறை பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகர் என்.சிறிப்.பிரியா ,சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களின் அறங்காவலர்களும்,இந்து சமய அறநெறி பொறுப்பாசிரியர்களும் என பலரும்  கலந்து கொண்டனர்.

செயலமர்வின் நோக்கம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து அமைப்புக்களிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் கலாசார உத்தியோகத்தர்கள் தெளிவூட்டியதுடன் .

இதேநேரம் வளவாளராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விளக்கமளிக்கையில்

வசதி படைத்தவர்களிடம் இருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதனையே ஒரு காலத்தில் ஆலயங்கள் மேற்கொண்டன. ஆனால் இன்று வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும். முடிந்தவரை ஆலயங்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார்.

மேலும் ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் அக்கிராமத்தினுள்ளேயே தீர்க்கப்படவேண்டும் எனவும் வீணே நீதிமன்றம் வரை செல்லும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பயிற்சி செயலமர்வில் குழுச் செயற்பாடும் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் ஆலயங்கள் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe