இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக (மஹர்) மணமகன் கொடுத்த பொருள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை (மஹர்) கொடுப்பது. அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து மணப்பெண் Helmi Susanti கூறுகையில், எனது கணவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் சிரமங்களை சந்திப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நான் தான் இந்த யோசனையை அவருக்கு கொடுத்தேன், அதே சமயம் என் பெற்றோர் அவரிடம் $2,771 வரதட்சணையை எதிர்பார்த்தனர் என கூறியுள்ளார். தனக்கு கிடைத்த செருப்பை Helmi பத்திரப்படுத்தி வைத்துள்ளார். வருங்காலத்தில் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதை காட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.
செய்தி - https://sea.mashable.com