சவுதி அரேபியாவில் அப்துல் அஸீஸ் என்ற 18 மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு காச்சல் ஏற்பட்டதன் காரணமாக குழந்தையின் பெற்றோர் குழந்தையை சவுதியில் உள்ள ஷக்ரா என்ற மருத்துவமனைக்கு (Shaqra General Hospital) அழைத்துச் சென்ற போது அங்கு குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தைக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட போது சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட குச்சி உடைந்து மூக்கினுள் சிக்கிக்கொண்ட காரணத்தினால் குழந்தை உயிரிழந்துள்ளது.
அறுவை சிகிச்சையின் பின் குழந்தை மயக்க நிலையிலிருந்து கண் விழித்தபோது குழந்தையின் உடல் நிலையில் மாற்றத்தை அவதானித்த குழந்தையின் தாய் குழந்தையை பரிசோதிக்கும் படி தெரிவித்துள்ளார் ஆனால் இரவு நேரத்தில் அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அடுத்த நாள் காலை 9 மணியளவில் குழந்தை மயக்கநிலையை அடைந்து சுயநினைவை இழந்திருந்தது. குழந்தையின் மூச்சுப் பாதையில் அடைப்பு இருப்பதனால், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து குழந்தையின் தாய் மற்றும் மாமா குழந்தையை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோரியுள்ளார் ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே குழந்தை உயிரிழந்து விட்டது.
சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் தௌபீக் அல் - ராபிஹ் (Tawfiq Al-Rabiah) உயரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான விசாரனைகளையும் அவரே மேற்கொள்ளவதாகவும் அறிவித்தார்.
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.