Ads Area

மாமியார் படிக்க வைத்த கலெக்டர் மருமகள் அதீலா.

டாக்டர் அதீலா ரபீஹ் அப்துல்லாஹ் ஐ.ஏ.எஸ்.
Dr. ADEELA RABEEH ABDULLAH I.A.S.,

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் முன்பிருக்கும் டெஸ்கில் பெயருக்கு பின்னால் ஐ.ஏ.எஸ் என்று பொறித்து புளகாங்கிதம் அடைந்த அதீலா தற்போது ஆலப்புழா கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மேஜை மீது நிஜமாகவே அதீலா ஐ.ஏ.எஸ் எனும் பெயர் பொறித்த அறிவிப்புடன் மலபார் பகுதியின் முதல் முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ் எனும் பெருமிதத்துடன் அமர்ந்துள்ளார்...

கோழிக்கோடு குற்றியாடி அருகில் உள்ள மிகவும் பின்தங்கிய வலயம் கிராமத்தில் பிறந்த அதீலாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் பள்ளிப்படிப்பை தொடர்ந்து மருத்துவம் படிக்க முடிந்தது.. ஆனால் மருத்துவராக சிலருக்கு சிகிச்சை செய்வதை விட கலெக்டராக ஒரு மாவட்டம் முழுவதும் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணமே மேலோங்கியது...

இதற்கிடையில் டாக்டர் ரபீஹ் என்பவருடன் திருமணம் முடிய குடும்ப வாழ்க்கை ஆரம்பமானது...

மருமகளிடம் கலெக்டர் ஆக வேண்டும் எனும் நிய்யத் ஒழிந்திருப்பதை அறிந்த ஓய்வு பெற்ற ஆசிரியையுமான மாமியார் தாஹிறா சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க அனுப்பி வைத்தார்...

டெல்லியில் ஹம்தர்த் சென்டரில் சேர்ந்த அதீலாவுடன் கணவர் ரபீஹ் தங்கியிருந்து உதவிட 2012 இல் சிவில் சர்வீஸ் முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்று கண்ணூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பு ஏற்றார்...

பயிற்சியிலும், பணியிலும் ஹிஜாப் அணிந்து கலந்து கொள்ள பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த போதும் தனது நிலையில் உறுதியாக இருந்த அதீலா இன்று வரை தனது மார்க்க அடையாளத்துடன் தான் வலம் வருகிறார்...

கேரளாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றி தற்போது 
கேரளா வயநாடு மாவட்ட ஆட்சியராக 
பணிபிரியும் அதீலா அவர்கள் மாணவர்களுக்கு வழங்கும் அறிவுரை...

" Don't ever think about what society or 
others think about you.
Believe only in your Ability..."

சிறப்புடன் பணியாற்றிட வாழ்த்தி,
வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்...

A.அப்துல் முத்தலிப்
தேசிய கவுன்சில் உறுப்பினர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe