சவுதி அரேபியாவின் றியாத் நகரத்தின் வாதி அல் தவாசீர் (Wadi Al-Dawasir) பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தேடப்பட்டு வந்த சவுதி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலைவனப் பகுதியில் தொழுகையின் சுஜூதுடைய நிலையில் (இஸ்லாமியர்களின் இறைவணக்க நிலை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துவாய்ஹி ஹமூத் அல் அஜலீன் (Dhuwaihi Hamoud Al-Ajaleen) எனும் நபர் ரியாத்தில் இருக்கக்கூடிய வாதி அல் தவாசீர் (Wadi Al-Dawasir) பகுதியில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் காணாமல் தேடப்பட்டு வந்ததாக சவுதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவரைத் தேடும் பணியில் இறங்கிய சவுதி அரேபிய மீட்புக் குழுவினர் தற்போது அவரை பாலைவனப் பகுதி ஒன்றிலிருந்து தொழுகையில் இருந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.
40 வயதான துவாய்ஹி ஹமூத் அல் அஜலீன் (Dhuwaihi Hamoud Al-Ajaleen) பாலைவனப் பகுதியில் வழி தவறி உணவின்றி இறந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. சவுதி அரேபிய பாலைவனப் பகுதியில் இவ்வாறு வழிதவறிச் சென்று நடுப் பாலைவனங்களில் மாட்டிக் கொண்டு உண்ண உணவின்றி பலர் இறப்பதுண்டு.
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.