Ads Area

மக்கள் உங்களை துரத்தியடிக்கும் காலம் வெகுதுரமில்லை. -வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமட்டுல்ல மாவட்டத்தில் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மூன்றாம் இலக்க வேட்பாளரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் சாய்ந்தமருது கடற்கரை வீதி,பெளசி விளையாட்டு மைதானத்தில்  (17) பிற்பகல் ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது .

இதன் போது இங்கு உரையாற்றிய வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்

முஸ்லிங்களின் மரியாதையை இல்லாமல் செய்த அந்த  இரண்டு தலைமைத்துவமும் ஒழிக்கப்பட்டு தேசிய காங்கிரஸ்தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இந்த தலைவர்களை மக்கள் துரத்தியடிக்கும் காலம் வெகுதுரமில்லை என்பதை தெரிவிக்கிறேன்.

எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துமானதும் நாட்டின் எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தேசிய காங்கிரஸ் தலைமைத்துவமாகும் . எமது பிரதேசத்தில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய தலைவர் என்ற ரீதியில் நாங்கள் எமது தேசிய காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொண்டு தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகிறோம் .

அம்பாரை மாவட்ட மக்கள் புத்திசாதூரியமானவர்கள் சிறந்த தலைமைதுவத்தை ஏற்படுத்த திடசங்கட்பம் பூண்டுள்ளனர் அதிலும் குறிப்பாக இவ் மாவட்ட மக்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது ஏனென்றால் இவ் மாவட்டதில் ஓர் தலைமைத்துவம் உள்ளது இது தான் தேசியத்துக்கும் ஒரு தலைமைத்துவமாக மாறப்போகின்றது.

எதிர் காலத்தில் எமது சுபீட்சம் மற்றும் எமது எதிர்கால சந்ததிக்கு சிறந்த விடயங்களை நாம் விட்டுச்செல்ல வேண்டும் அதற்காய் நாம் தேசிய காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இவ் பொது கூட்டத்திற்க்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்,மற்றும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளிவாசல் நிருவாகிகள்,தேசிய காங்கிரஸ் முக்கிஸ்தகர்கள் பொது மக்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe