Ads Area

அஞ்சல் வாக்காளர்களுக்கு ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் விடுக்கும் பணிவான வேண்டுகோள்.


தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள எனது பேரன்பிற்கும் பெரு மதிப்புக்குரிய கல்விமான்களே! புத்திஜீவிகளே! அரச உத்தியோகத்தர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும் 2020.08.05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பாக மயில் சின்னத்தில் 4ம் இலக்கத்தில் களமிறங்கியுள்ள ஒரு மகத்தான வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அருளியுள்ளான் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சந்தர்ப்பத்தில் உங்களோடு எனது உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

நாட்டின் அதியுட்ச அரசியல் சபையான பாராளுமன்றத்திற்கு நாட்டில் உள்ள 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் சென்றமர்ந்து அங்கு மக்களுக்கான ஆட்சியினை மக்களால் ஒரு போதும் செய்ய முடியாது அதற்குப் பகரமாக மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்க மக்களின் பிரதிநிதியாக , மக்களின் அமானிதப் பொறுப்புக்களைச் சுமந்தவர்களாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு சிலர் பாராளுமன்றம் அனுப்பப்படுகின்றார்கள் இவ்வாறு அனுப்பப்படும் மக்கள் பிரதிநிதிகளில் பலர் மக்களின் அமானிதங்களைப் புறக்கணித்து தங்களின் சுயநலப் போக்குகளிலேயே மதிமயங்கித் திழைக்கின்றார்கள் அவ்வாறான ஒரு சுயநலப் போக்குக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளை நாம் இனியும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியாது. 

இவ்வாறானவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமூகத்தின் உரிமைகள், தேவைகள், அபிவிருத்திகள் போன்றவற்றை நன்கு திட்டமிட்டுச் செய்யக் கூடிய திறன்வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது உங்கள் ஒவ்வொருவரது தலையாய கடமை அத்தகைய வேலைத்திட்டங்களை நான் திறன்பட செய்வேன் என நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன்.

இதுவரை காலமும் எனக்கு நீங்கள் அளித்திருந்த அமானிதப் பொறுப்புக்களான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் போன்ற பதவிகளை நான் எனது சுயநலத்திற்காகவோ, சுகபோகத்துக்காகவோ பயண்படுத்தியதில்லை மாறாக அந்த அமானிதப் பதவிகளைக் கொண்டு என்னால் முடிந்த வரை நான் மக்களுக்கு வேயையாற்றிள்ளேன். இந்த அமானிதப் பதவிகள் இல்லாதிருந்த காலத்தில் கூட நான் பல்வேறு வழிகளில் எனது சக்திக்கு உட்பட்டு பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களையும் செய்திருக்கின்றேன் அதனை நீங்களும் நன்கறிவீர்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் அனுப்பும் மக்கள் பிரதிநிதிகள் நம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பது அவர்களது தார்மீக கடமையாகும் ஆனால் நமது முந்தைய பிரதிநிதிகளால் நமது உரிமைகள் ஒவ்வொன்றாக சிங்கள பேரின சக்திகளால் பறிபோனதுதான் மிச்சம். இன்சா அல்லாஹ் எனது அரசியல் போக்கு இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக சமூகத்தின் உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் குரல் கொடுப்பதாகவே இருக்கும்.

இன்று நமது அம்பாறை மாவட்டத்தில் நாம் சந்திக்கவுள்ள தேர்தலானது முன்னொருபோதும் இல்லாதவாறு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் போகின்றது, இது கத்தி மேல் நடக்கும் சூழ்நிலையை ஒத்தது இதிலிருந்து நாம் மீண்டு அம்பாறை மாவட்டத்தையும் மீட்கப் போகின்றோமா அல்லது பறி கொடுக்கப் போகின்றோமா என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.

என்னைப் பற்றி பல ஆண்டுகாலமாக தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், எனது சேவைகள், அரசியலுக்கு அப்பாலான எனது சமூகக் கடமைகள், எனது பின்புலன்கள், எனது நேர்மை, எனது உண்மைத் தன்மை, யாரை பிடித்தாவது அபிவிருத்திகளையும், தேவைகளையும் மக்களின் காலடிக்கு கொண்டு வந்து சேர்க்கும் திறன் மற்றும் மக்களுக்காக தைரியமாக பாராளுமன்றம் வரை குரல் கொடுக்கக் கூடிய தைரியம் இவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் நிச்சயம் உங்கள் தபால் மூல வாக்களிப்பில் எனது சின்னமான மயில் சின்னத்திற்கும் 4ம் இலக்கத்திற்கு வாக்களிக்க மறந்து விடாதீர்கள்.

நீங்கள் இடும் புள்ளடிகள் வெறும் பேனாவினால் இடும் புள்ளடிகளாகவிருந்தாலும் அதுதான் நாளைய நமது சரித்திரங்களை மாற்ற துனையுரியும் என்பதை மனதில் இருந்தி எனது இலக்கத்திற்கும் மயில் சின்னத்திற்கும் தவறாது வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வீர்கள் என உறுதியாக நம்புகின்றேன்.


இப்படிக்கு.
ஐ.எல்.எம்.மாஹிர்
பாராளுமன்ற வேட்பாளர்
திகாமடுல்ல மாவட்டம்
அகில இலங்கை மக்கள் காங்ரஸ்.
தொலைபேசி - 0777272998



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe