Ads Area

விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கணவன்!

கேரள விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக துபாயில் இருந்து அவரது கணவன் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதால், 19 பேர் பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க Manal Ahmed என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.

முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், Manal பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சுற்றுலா விசா மூலம் கணவரைப் பார்க்க அங்கு சென்றுள்ளார். அது காலாவதியான நிலையில், கேரளா திரும்பிய போது, இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது.

இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி சடங்குகள் போன்றவைகளில் கலந்து கொள்வதற்காவும் அவரது கணவர் Athif Muhammed இந்தியா திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Athif Muhammed-ன் தந்தை Ismail. இது குடும்பத்திற்கு ஒரு கடினமான கட்டம். முதலில் அவரின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

இருப்பினும் மரணம் குறித்து எந்த ஒரு நம்பகமான தகவல் வராததால், சற்று தைரியமுடன் இருந்தோம்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். ஏனெனில் பலர் மீட்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானதால், அவர் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார் என்று நினைத்தோம்.

ஒரு நன்கு படித்த மற்றும் லட்சியம் கொண்ட பெண்ணாக இருந்தார். கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் அவர் தனது தந்தையை இழந்துவிட்டார்.

தம்பதிக்கு கடந்த ஆகஸ்டில் திருமணம் நடைபெற்றது, Athif Muhammed அண்மையில் துபாயில் கணக்காளராக பணிபுரிந்த பின்னர் அஜ்மானுக்கு குடிபெயர்ந்தார். பிப்ரவரி மாதம் Manal ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe