Ads Area

சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள வைத்தியர் இஸ்தியாக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சம்மாந்துறையைச் சேர்ந்த Dr.AR.Mohamed Isthiyak கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பிற்கான மருத்துவ நிறுவனத்தினால் (PGIM) நடாத்தப்படும் அறுவைச்சிகிச்சை நிபுணருக்கான அனுமதித் தேர்வில் சித்தியடைந்து நமது சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு எனது உள்ளம் கனிந்த அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வுறுகிறேன்.

ஏற்கனவே சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஐ.முஸம்மில் அவர்களும் அறுவைச்சிகிச்சை நிபுணருக்கான (VOG) கற்கைநெறித் தேர்வில் சித்தியடைந்து ஊருக்கு பெருமை சேர்த்திருந்தார் அந்த வகையில் தற்போது வைத்தியர் ஏ.ஆர்.முஹம்மட் இஸ்தியாக் அவர்களும் தெரிவாகியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாகவுள்ளது.

நமது சமூகத்தில் இவ்வாறான வைத்திய நிபுணர்களின் தேவை காலாகாலமாக உணரப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடையம், அதிலும் பெண் வைத்திய நிபுணர்களின் தேவையே அதிகம் உணரப்பட்டு வருகின்றது.

அறுவைச்சிகிச்சை நிபுணருக்கான அனுமதித் தேர்வில் தெரிவான வைத்தியர் ஏ.ஆர். முஹம்மத் இஸ்தியாக் அவர்களை உளமாற வாழ்த்துவதோடு, தனது கற்கைநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து நமது மண்ணுக்கும், சமூகத்திற்கும் அளப்பெரிய சேவையாற்ற அவருக்கான எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகின்றேன்.

நன்றி.
ஐ.எல்.எம். மாஹிர்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe