(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை 6ஆம் கொளனி றோயல் விளையாட்டுக் கழகத்தின் புதிய அங்கி அறிமுக சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடாக்கோ நிறுவனத்தின் அனுசரணையில் 6ஆம் கொளனி அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற றோயல் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வீரத்திடல் விளையாட்டுக் கழகம் 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 144 ஒட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகன் விருதை றோயல் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் ஏ.எம்.சனீர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், கடாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.எம்.வசீர்;; தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இதன்போது விளையாட்டுத் துறை மற்றும் சமூக சேவைக்கு பங்களிப்பு செய்தவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.