தமிழ் நாடு ராசிபுரம் அடுத்த அணைபாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது இரு மகள்கள் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தனர். இந்தநிலையில் 2 சிறுமிகளையும் ஆபாசமாக படம் எடுத்து அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உட்பட 15 பேர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசாரிடம் அடையாளம் காட்டினர். அதன்படி சிவா, சண்முகம், ஊமையன், மணிகண்டன் , சூர்யா, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூட்டாகச் சேர்ந்து பலர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.