Ads Area

இம்மாதம் முதல் (நவம்பர்) ஓமானில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியிடு.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஓமானில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இம் மாதம் முதல் (நவம்பர்)  ஓமானில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படும் இந்த விமானங்களில் ஓமான் தலைநகரான மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் அடிப்படையில், ஓமானில் இருந்து தமிழகத்திற்கு நவம்பர் மாதத்தில் மொத்தம் 17 விமானங்கள் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் 9 விமானங்கள் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் 8 விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் பயணிக்க விரும்புபவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ விமான டிக்கெட்டிற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓமானில் இருந்து திருச்சி செல்லும் விமானங்களின் விபரங்கள்

 


ஓமானில் இருந்து சென்னை செல்லும் விமானங்களின் விபரங்கள்.



Thanks - Khaleej Tamil.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe