Ads Area

இலங்கைக்கான விமானச் சேவைகளை மீள ஆரம்பித்தது ஓமான் விமானச் சேவை!

ஓமான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஓமான் ஏயார் தனது சர்வதேச விமான சேவைகளை இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்கு மீண்டும் தொடங்கவுள்ளது. ஓமானின் தேசிய விமான சேவையான “சுல்டானேட் ஓமான்” தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

ஓமான் எயார் வாரத்துக்கு இரு விமான சேவைகளை இலங்கை, குவைத், பஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கு  இயக்கவுள்ளது. இந்த விமான சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு omanair.com என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம்.

கொரோனா தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விமானப் பயணங்களை நிறுத்திய ஓமான், ஏழு மாதங்களுக்குப் பின் கடந்த ஒக்டோபர் 1 முதல் சர்வதேச விமான பயணங்களை மீள ஆரம்பித்துள்ளது.

கொரோனா பரவல் இரண்டாம் கட்ட அலை இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் ஓமானின் தேசிய விமான சேவையான “சுல்டானேட் ஓமான்” தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe