நவம்பர் 1 முதல் ஜனவரி 14, 2021 வரையிலான காலகட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட சவுதி அரேபியா அனுமதித்துள்ளது. தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வன விலங்குகளை வேட்டையாடச் செல்லும்போது கண்டிப்பான சில முக்கிய விடையங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமைச்சகம் கோடிட்டுக் காட்டியுள்ளது அதனடிப்படையில் அரேபிய ஓரிக்ஸ் (Arabian oryx) , மான் (deer) , ஐபெக்ஸ் ஆடு (ibex) மற்றும் அரேபிய புலி (Arabian tiger), லின்க்ஸ் என்ற காட்டுப் பூனை( lynx) , ஓநாய் (wolf) , ஹைனா வகை காட்டு நாய் (hyena) போன்ற விலங்குகளையும் மற்றும் சில பறவையினங்களையும் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்டையாடலுக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மாத்திரமே பயண்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெளிப்பு துப்பாக்கிகள் (spray guns), மீன்பிடி வலைகள் அல்லது விச வாயுக்களைப் பயண்படுத்துதல் போன்ற அங்கீகரிக்கப்படாத முறைகளில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளதோடு ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகள் அல்லது பறவைகளைப் பிடிக்க வழிவகுக்கும் வேறு எந்த வழிகளையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மாற்றமாக வேட்டையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் சவுதி வனவிலங்குள் அமைச்சு அறிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.