Ads Area

கொரோனா அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரியது விடயமாகும்.

கொவிட் அச்சத்திற்குள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளதைப் போன்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட பலரும் முழுமையாக குணமடைந்துள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். இது செய்யக் கூடாததும் இடம்பெறக்கூடக் கூடாததுமாகும். அவ்வாறு அச்சமடைய வேண்டிய தேவை கிடையாது. கொரோனா தொற்றுக்குள்ளாகி எவ்வித அறிகுறிகளும் இன்றி காணப்பட்டோரில் 80 சதவீதமானோர் இலங்கையில் குணமடைந்துள்ளனர். அறிகுறிகளுடன் தொற்றுக்குள்ளானவர்களும் அதிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அருகில் இருந்தாலும் முகக் கவசத்தை முறையாக அணிந்திருந்தால், ஏனையோர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். கொரோனாவுடன் வாழ்வதற்கு இந்த அடிப்படை சுகாதார விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe