சவுதி அரேபியாவில் இக்காமாவை மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் வீட்டு தொழிலாளர்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் இக்காமாவை புதுப்பிப்பதற்கு அவர்கள் வேலை தகுந்தாற்போல் சராசரியாக ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் வரை செலுத்த வேண்டி வரும். இதற்கு முன்னர் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் மட்டுமே புதுப்பிக்க இயலும், தற்பொழுது ஒரு வருடத்திற்கு நான்கு தவணையாக புதுப்பித்துக் கொள்ளலாம். அதாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக் செய்ய முடியும். இது சவுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கு இலகுவாக இலகுவானதும், மகிழ்ச்சியானதுமான செய்தியாகும்.
இது வீட்டு பணியாளருக்கு பொருந்தாது. வீட்டுப் பணியாளர்களின் இக்காமா புதுப்பிப்பதற்கு வருடத்திற்கு 650 ரியால் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு - https://lifeinsaudiarabia.net