சம்மாந்துறை அன்சார்.
இறக்காமம் குடிவில் பிரதேச அல்-ஹிரா வித்தியாலயத்தில் தரம் 01 முதல் தரம் 09 வரை கல்வி பயிலும் 111 மாணவர்ளுக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று குடுவில் அல்-ஹிரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 111 மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் இறக்காம பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எப்.நஹீஜா முஸாபிர், ஜப்பானில் வசிக்கும் அல்-ஹாஜ் முஹமட் ரீஷா, இறக்காமம் பிரதேச மத்திய குழு தலைவர் திரு. பஸ்லுல் ஹக், குடிவில் பிரதேச கிராம சேவகர், குடிவில் பள்ளிவாசல் செயலாளர் திரு. சுபைர் மற்றும் குடிவில் மீனவர் சங்க உறுப்பினர்களாக திரு.சப்றாஸ், ஜமிறுான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டுப்படுத்தப்பட்ட குடிவில் அல்-சஹிர் சிறுகைத்தொழில், விவசாய, கிராமிய அபிவிருத்தி, நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க மாஹிர் அவர்களினால் அவரின் சொந்த நிதியிலிருந்து இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.