இன்று சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் முழுத்தீவினையும் உள்ளடக்கிய மைதான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கரப்பந்து மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸ்ஸாநாயக்க அவர்களினால் கரப்பந்து மைதானத்திற்கான அடிக்கல் நடப்பட்டதுடன் பாடசாலைகளுக்கான டெப் கணினியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் Dr. திலக் ராஜபக்ஷ அவர்களும், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் M.S.சஹுதுல் நஜீம் அவர்களும், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் A.J.லத்தீப் அவர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.முஹம்மட் ஹனீபா அவர்களும், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் அவர்களும், சம்மாந்துறை பிரதேச SLPP அமைப்பாளர் S.L.M.தெளபீக் அவர்களும்,
சம்மாந்துறை வலக்கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர்களான S.M.M.அமீர், S.M.ஹைதரலி, A.L.A மஜீட் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி நிறேவேற்றுக்குழு உப தலைவர், செயலாளர், ஏனைய பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.