Ads Area

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு.

இந்தியாவில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.  

இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.  இத்தகைய சூழலில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.

எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

‘ஏா் பபுள்’ விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe