Unity விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற தொடரில் சம்மாந்துறை IBM கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சம பலமிக்க 8 அணிகள் பங்குபற்றிய இத் தொரில் IBM கழகம் மற்றும் Tittans கழகம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. முதலில் துடுப்படுத்தாடிய IBM அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் சுமார் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 59 எனும் வெற்றி இழக்கை நோக்கி துடுப்படுத்தாடிய Tittans கழகம் 5 ஓவர்களில் 48 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டது. IBM கழகம் 10 ஓட்டங்களினால் போட்டியை வெற்றி பெற்று, தொடரையும் தன்வசப்படுத்தியது.
தொடரை வெற்றி ஈட்டிய IBM கழக வீரர்களுக்கு வாழ்த்துக்களையும், இரண்டாம் இடத்தினை பெற்ற Tittans கழகத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வெற்றிகரமாக தொடரை நடாத்திய Unity அணியினருக்கும் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- ஊடக குழு -