நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக அல் ஹாபிழ் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) இன்று (25) புதன் கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அக்கரைப்பற் று பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில் இன்று புதன் கிழமை முதல் இறக்காமம் பிரதேச செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த கடமையேற்பு நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இடம்பெற்றது. கொரோனா அசாதாரன நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் குறுகிய ஏற்பாட்டுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.