தகவல் - சம்மாந்துறை அன்சார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை உக்ரேனிய இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 26 வயது மதிக்கத்தக்க குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவரை குவைத் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
உக்ரேனிய இளம் பெண்னை பாதையில் வழிமறித்த குறித்த நபர் அப் பெண் சல்மியாவை அடையும் வரை அவரைப் பின்தொடர்ந்த நபர் வலுக்கட்டாயமாக அப் பெண்ணின் குடியிருப்பில் நுழைந்து அவரை பாலியல் துன்புறுத்த முயன்றுள்ளார்.
செய்வதறியாது தவித்த அந்தப் பெண் அழுது உதவி வேண்டி கூக்குரலிட்டுள்ளார் அவரது கூச்சல் சத்தத்தை கேட்ட குடியிருப்புக் காவலாளி விரைந்து வந்தவுடன் சந்தேக நபர் அவ்விடத்தை விட்டுத தப்பிய நிலையில் தற்போது குவைத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் குறித்த அந்த நபர் உக்ரைனிய பெண்னை வழிமறித்து அவரிடும் பேசும் வீடியோ அப்பகுதியில் இருந்த சீ.சி.டி வியல் பதிவாகியுள்ளது.
News Source - http://www.arabtimesonline.com