இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கான விமானத் தடை அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் சிக்கித் தவிக்கின்ற துபாய் குடியிருப்பு விசா கைவசம் உள்ளவர்களில் காலாவதியான அனைத்து விசாக்களும் நவம்பர்-10,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாய் குடியிருப்பு மற்றும் வெளியுறவு இயக்குனரகம் (GDRFA) நேற்று (23) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதுபோல் இந்தியாவை தவிர இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணத்தடை காரணமாக சிக்கியுள்ள நபர்களுக்கும் இந்த அறிவிப்பின் பலன் கிடைக்கும்.
மேலும் அந்த அறிக்கையில் ஏப்ரல்-20,2021 முதல் நவம்பர்-9,2021 வரையிலான தேதிகளுக்கு இடையே காலாவதியான அல்லது காலாவதியாகும் துபாய் குடியிருப்பு விசாக்களும் இவ்வாறு நீட்டிக்கப்படும். அதேநேரம் அக்டோபர்-20,2020 அன்றைய தினத்தில் இருந்து துபாயை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாக வசித்து வருகிற துபாய் குடியிருப்பாளர்களுக்கான விசாக்கள் கைவசம் உள்ளவர்களின் விசா காலாவதி நீட்டிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.