ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி பயனாளிகளுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டு அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி நலனுதவித்தொகை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ் ஸிராஜ், ஹிஜ்றா, ஹுதா, மிலேனியம் சமுர்த்தி வங்கிகளில் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம் இன் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல். முஹம்மது ஹனீபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனுகரிகளுக்கான உரித்துச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், 2021ஆம் ஆண்டுக்காக அரனெலு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள், இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம். பாரீஸ், சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர் எஸ்.எம். அம்ஸார், திட்ட முகாமையாளர் எச்.எம். அலீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கணக்காய்வு உத்தியோகத்தர்களும் ,அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.