இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம, நாளை சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான பொது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
"எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஜூலை 9 ஆம் தேதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
1948 க்குப் பிறகு தேசம் ஒன்றுபட்ட முதல் தேசிய நோக்கம் இதுவாகும் என்று கூறிய மஹாநாமா, ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம் என்றும் கூறினார்.
"நான் என் வாழ்நாளில் 2/3 வாழ்ந்துவிட்டேன், இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த இடத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன். எனவே, நானே போராட்டங்களில் கலந்துகொள்வேன், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்முறையற்ற முறையில் போராட்டங்களை நடத்துவதையும் உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மாற்றம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்!'' என்றும் அவர் மேலும் கூறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.