சட்டத்திலே “பொலிஸ் ஊரடங்கு” என எதுவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M.A Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயத்தினை காணொளி ஒன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இது நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள சட்ட விரோத அறிவிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணsuத்தின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கே பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.