Ads Area

போதைப்பொருளுடன் கைதான கணக்காளருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று தடுப்புக்காவல் உத்தரவு.

 பாறுக் ஷிஹான்.


நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந்திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


நேற்று (23) கைதான குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்புக்காவல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


சந்தேக நபரான கணக்காளர் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.


அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன் போது கணக்களார் வசமிருந்து  ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன், தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியிலிருப்பவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தற்போது 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 39 வயது மதிக்கதக்க சந்தேக நபரான கணக்காளரான மேலதிக விசாரணைகளை     பெரிய நீலாவணை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe