Ads Area

Rijcklof Volckertsz. van Goens அவர்களின் 1675 ஆண்டைய கட்டுரையில் சம்மாந்துறை ஆலையடிச் சந்தை பற்றிய குறிப்புக்கள்.

 சாக்கீர் எம்.ஜ.எம்.


2012 இல் சம்மாந்துறை பெயர் வரலாறு பற்றிய தொகுப்பை மேற்கொண்டிருந்த வேளை. Donald Ferguson அவர்களின்  The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland ஆய்வேட்டில் இல் வெளியான டச்சுக் குறிப்புகள் அடங்கிய ஒல்லாந்தர்களின் ஆரம்பகால இலங்கை தரிசிப்புகள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய  ஆங்கில நூலொன்று கிடைத்தது. (The Earliest Dutch Visits to Ceylon) அந்நூலில் Rijcklof Volckertsz. van Goens அவர்களின் 1675 ஆம் ஆண்டைய மட்டக்களப்பு பாணமை பகுதிகளின் ஆள்புல எல்லைகளை விவரிக்கும் கட்டுரையில் சம்மாந்துறை பற்றிய அடிக்குறிப்புகளில் ஒன்று பின்வருமாறு காணப்பட்டது.


"Van Keulan என்பவரின் இலங்கையின் கிழக்குக்கரை தொடர்பான வரைபடத்தில்  சம்மாந்துறை, மட்டக்களப்பு என்பன ஒன்றாக (Chiampanture, Motecaleppe) குறிக்கப்பட்டு அடைப்புக் குறிக்குள்.


"Groote Markt of Handelplats' - Grate Market or Trading Pace 


எனக்குறிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடுகின்றார்....


அதனருகில் டச்சுக் கொடியுடன் ஒரு சிறு கோட்டையும் வரையப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 


மேலும் இது சந்தேகத்திற்கிடமின்றி அட்மிரல் Spielbergan (1602) குறிப்பிட்ட 'King of Matecalo' இன் வாசஸ்தலம்  இருந்த  'Matecalo' சம்மாந்துறைதான் என்றும் குறிப்பிடுகிறார்.


இங்கு குறிப்பிடப்படுகின்ற சந்தை அல்லது பல்பொருள் அங்காடி என்பது சம்மாந்துறையின் பிரசித்தம் மிக்க ஆலையடிச் சந்தையை குறிப்பதாகும்.


பழைய மார்க்கெட் வீதி என்று அழைக்கப்படும் பஸார் வீதி தொடங்கி சின்னப்பள்ளி என்று அழைக்கப்படுகின்ற முகைதீன் பள்ளியின் அருகில் இருந்த குளம் வரைக்கும் இச்சந்தை வியாபித்து இருந்திருக்கின்றது. 


புளியந்தீவின் ஊடாக மட்டக்களப்பு வாவியுள் நுழைகிற வெளிநாட்டு சரக்கு கப்பல்களும், கீழைக் கரையின் பிற துறைமுகங்கள் ஊடாக நுழைகின்றன உள்நாட்டு வள்ளங்களும். சம்மாந்துறை துறைமுகத்திலிருந்தே தரைவழிப் பயணத்தைத் தொடங்குகின்றன. 


பூமரத்தடி  போன்ற இடங்களில் இருந்தது தாவள முகாந்திரங்களிடம் இருந்து மாட்டுத் தொடுவைகளை வாடகைக்கு பெறும் வர்த்தகர்கள், காட்டுப் பாதைகள் வழியே கண்டிக்கு தமது மூட்டைகளை கொண்டு சென்றுள்ளனர்.


இவ் வர்த்தக பரிமாற்றத்தின் மிகப்பெரும் அங்காடியாக திகழ்ந்த சம்மாந்துறை ஆலையடிச் பற்றிய இவ் வரைபட குறிப்பின் மூல பிரதியை கடந்த 12 வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன். இறைவன் அருளால் இன்று கைகூடி உள்ளது. 


1789. 02. 04 இல் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில மொழி வரைபடம் ஸ்பெயின் சுவடிகள் கூடத்தில் இருந்து கிடைக்கப்பெற்றது.  அதில் Great Bazar or Market Place என்று சந்தைத்தொகுதி வரையப்பட்டுள்ளது. 


ஆங்கிலேயர் காலத்திலிருந்து பாதைகள், பாலங்கள், புகையிரதப் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட துரித முன்னேற்றமும். ஒல்லாந்தர் காலத்திலிருந்து சுதந்திரமான பாரம்பரிய வர்த்தகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடையும் தேசத்தின் பெரும் வர்த்தக சந்தையை  நினைவுகளில் இருந்து மறக்கடித்து விட்டன. 


235 ஆண்டுகள் பழமையான இவ் வரைபடம்  பல வாய்மொழி வரலாறுத்தகவல்களை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை நமது பாரம்பரியத்தின் வேர்களை அறிய இன்னுமொரு வாசலைத் திறந்துள்ளது.


சாக்கீர். எம்.ஐ.எம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe