Ads Area

சம்மாந்துறை மீடியா போரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் !

சம்மாந்துறையிலுள்ள அனைத்து ஊடகத்துறை சார் செயற்பாட்டாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், ஓய்வுநிலை ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒன்றினைத்து உருவாகியுள்ள ''சம்மாந்துறை மீடியா போரம்"தனது முதலாது உத்தியோபூர்வ அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) சம்மாந்துறையில் இடம்பெற்றது.


மூத்த ஊடகவியலாளரும், கல்விமானுமாகிய மன்சூர் ஏ காதிர், ஒலிபரப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்-ஹாபிழ் எஸ்.எம். ஹனீபா, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் மனித நேயன் இர்ஷாட் ஏ காதர்,  மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.புவாத் ஆகியோரை ஆலோசகர்களாக அங்கரித்து அவர்களுடன் போசகர்களாக மரியாதை நிமிர்த்தம் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாறன் யூ செயின், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் யூ.எல். அலியார் ஆகியோரையும் அமைப்பின் அங்கத்தவர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் நியமித்து பயணிக்க ஆரம்பிக்கப்பட்டது.


அத்துடன் உத்தியோகபூர்வமான நிர்வாக சபையும் சபையோரின் ஏகோபித்த பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டது.


தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை விபரம்


தலைவர் – எம்.ஐ.பீ. பௌஸ்தீன்

உப_தலைவர்கள் – கலாநிதி எஸ்.எல். றியாஸ், தேசபந்து.ஐ.எல்.ஜலீல் ஜீ

பொதுச்_செயலாளர் – ஏ.ஜே.எம். ஹனீபா

உப_செயலாளர் – நௌஷாட் ஏ. கரீம்

நிர்வாகச்_செயலாளர் – எம்.எச்.எம்.ஹாரீஸ்

இணைப்புச்_செயலாளர் – கியாஸ் ஏ. புஹாரி

பொருளாளர் – யூ.எல்.எம். றியாஸ்.


நிர்வாக_சபை_உறுப்பினர்கள் – காலீத் உசைன், எம்.எல். இஷ்ஹாக், எஸ்.எம்.எம். ஜவாத், எம்.சி. அன்சார், எம்.ஐ.எம். சாக்கீர், ஏ.ஜீ.எம். பிரோஸ், சீ.எம்.யூ . தாரீக் முஹம்மட்( Rj Thariq Mohammeth ), மிஸ்பாஉல் ஹக் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.


இவ்வமைப்பானது சம்மாந்துறையின் பெயர் நாமத்தை எப்போதும் ஒரு குடையின் கீழ் கட்டுப்கோப்பான நடுநிலையான ஊடக செயற்பாட்டை மேற்கொண்டு செல்லும் துறைசார் விற்பனர்களை உருவாக்கி எதிர்கால சந்ததியினரை வளப்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது.


எதிர்காலத்தில் பல்வேறு ஊடக பயிற்றுவிப்புக்கள் மற்றும் ஊக்கப்படுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், பன்பட்ட ஊடக கலாசாரத்தை இப்பிரதேசத்தில் வளர்ந்து வரும் ஊடக ஆர்வலர்களுக்கு ஒத்தாசையாகவும், பயிற்சியாகவும் வழங்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.


ஊடகத்துறைசார் செயற்பாட்டார்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஓய்வுநிலை ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு, தங்களின் கருத்துக்களை இங்கு தெரிவித்தனர்.


சிலர் வேலைப்பழு காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.. அடுத்த கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe