சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட காலமாக கணக்காளர் இல்லாத குறையை சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் ரிஸாட் பதியுதீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களின் அயராத முயற்சியினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியினை இன்று நிதியமைச்சின் ஆளணித்துவ முகாமைத்துவ நிர்வாகம் வழங்கி இருந்தது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் புதிய கணக்காளரை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுதீன் அவர்களுக்கும், இம்முயற்சியில் பங்களிப்பு செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை அமைப்பாளர் ஐ. எல்.எம். மாஹிர், உயர்பீட உறுப்பினர் அஸ்மி யாசீன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரியாஸ் அவர்களுக்கும் இத்தருணத்தில் சம்மாந்துறை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.