Ads Area

தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

பகமுன பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500 பணியாளர்கள் இன்று காலை உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஊழியர்கள் தமது பணியிடத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னர் சுகவீனமடைந்து பகமுன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பக்கமுன பிரதேச வைத்தியசாலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சில நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக அத்தனகடவல கிராமிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, பகமுன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe