5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை (Post-mortem examination) கட்டாயம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிறு வயதுக்கு குழந்தைகளின் இறப்பு தொடர்பான ஆய்வினை வலுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான பகுதியாகும் என்று மரண விசாரணை அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் இறப்புக்கான பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய இறப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.