தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களை மூடி பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் இன்று (19) திகதி இரண்டாவது நாளாகவும் பூட்டப்பட்டு, தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருவதுடன், குறித்த செயற்பாட்டினால் பொதுமக்கள் பாரிய சிரமத்தினை எதிர்நோக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.