சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினரோடு சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டாரப் பிரதிநிதி ரிஸ்விகான் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். இந் நிகழ்வானது அண்மையில் இடம் பெற்றது.
வீரமுனை வட்டாரத்தினை உள்ளடக்கிய சகல பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் சந்திப்பிற்கான அழைப்பினை விடுத்து அதில் முதற்கட்டமாக சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் மற்றும் சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் குறித்த பள்ளிவாசல்களின் அபிவிருத்தி தொடர்பான தேவைகள் பள்ளிவாசல் மஹல்லாவாசிகளின் குறை-நிறைகள் மற்றும் பிரதேசத்தில் போதைப் பாவனையினை கட்டுப்படுத்தும் நிலைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு அதனை நிபர்த்தி செய்யும் பொறிமுறைகள் குறித்தும் பரீசிலிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாக தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகத்தினர், ஹிலால் பள்ளிவாசல் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச பொறுப்பு நம்பிக்கையாளர் ஏ.முஹம்மட் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.