சம்மாந்துறை -வீரமுனையில் இருந்து கொழும்பு வந்த ஒருவரிடமிருந்து 70 இலட்சம் ரூபாவை ஒன்லைன் ஊடாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீரமுனையை சேர்ந்தவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச தொழில் செய்பவர் அவரது உறவினர் ஒருவர் பிரான்சில் வாழ்பவர் அவர் ஊடாகவே பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக நேர்முகப் பரீட்சைக்கு மற்றும் வேலைகளுக்குமாக சம்மாந்துறையில் இருந்து கொழும்பு 08 ஆம் திகதி வந்துள்ளார்.
இவர் பற்றிய சகல தகவல் அறிந்த ஒருவரே புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து இவரை வழிமறித்து ஓர் முச்சக்கர வண்டியில் ஏற்றி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது.
அதன் பின்னர் அவரது கையடக்க தொலைபேசி மற்றும் ஒன்லைன் ஊடாக இந் நபரை ஏற்றிவந்தவர் பலவந்தமாக அச்சுறுத்தி அவரது பணத்தை ஒன்லைன் ஊடாக பண மாற்றம் செய்துள்ளார் மேற்படி விடயம் 08 ஆம் திகதி இரவு நடைபெற்றது.
கடந்த 09 யே திகதியே புறக்கோட்டை பொலிஸாருக்கு தனது பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குறிப்பிட்ட நபர் முறைப்பாடு செய்துள்ளார் ஆனால் இவர் முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற இடங்கள் இவர் அறிந்திருக்கவில்லை இருந்தும் போலீசார் சீ.சீ.ரீ. கேமரா ஊடாக கமராக்களை பல நாட்கள் பரீசிலினை செய்து ரமணன் எனும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பிரான்சிலிருந்து அவரது சகோதரர் பொலிஸாருக்கு இவர் பற்றிய முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார் .
இவர் இந்த நபர் பற்றிய சகல தகவல்களை அறிந்து முச்சக்கர வண்டியுடன் ஓலக்கோட் மாவத்தையில் 07 மணி வரை இந் நபர் வரும் வரை காத்திருந்து அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி ஒன்லைன் ஊடாக அவரின் கணக்கில் இருந்த 70 லட்சத்து 058,000 அவரது கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் வீரமுனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விட்டுள்ளார் என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர் மேற்படி நபர் பிரான்சில் உள்ள நபரின் சகோதரர் ரமணன் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்கூட்டியே இவரது பிரான்ஸ் விஷயங்களை அறிந்து இவர் இவ் பண ஆன்லைன் பணக் கொள்ளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புறக்கோட்டை பொலிஸார் 17 ஆம் திகதியே சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.