(சர்ஜுன் லாபீர்)
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக சம்மாந்துறை வலயத்தின் அதிகஷ்டப் பிரதேச பாடசாலையான மல்வத்தை-02 புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் அதிகூடிய 180 புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதுவே அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழிமூலமான அதிகூடிய புள்ளி சாதனையாகும்.
இம்மாணவனை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா நேற்று (09) நேரடியாக அம்மாணவனின் வீட்டுக்குச்சென்று பாராட்டிக் கெளரவித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை உதவிப்பிரதேச செயலாளர் வீ.வாசீத் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் அ.அஹமட் சபீர், பாடசாலை அதிபர் ரி.ஜெயசிங்கம், கிராம சேவகர்களான ஏ.பிரத்தீபன், ஐ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதுநகர்ப்பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 100 சத வீத மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.