கியாஸ் ஏ புஹாரி.
அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக செயலாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த திருமதி ஏ.ஐ. இப்திகார் பானு இன்று அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம, முன்னிலையில (10ம் திகதி) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவர் அம்பாறை மாவட்டத்தின் பிரதி காணி ஆணையாளராக 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார், மேலும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிய திறமையான நிர்வாக அதிகாரி ஆவார்.

