அம்பாறை மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமையில் தமன பிரதேச செயலகத்தின் ஹிங்குரான பகுதியில் காலாவதியான பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் மீது சோதனை நடாத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் மாவட்டத் தலைவர் திரு. சாலிய நவரட்ண தலைமையில் நேற்று (09) தமன பிரதேச செயலகத்தின் ஹிங்குரான பகுதியில் காலாவதியான பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்கள் நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த சோதனையில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரிகள் பங்கேற்றனர்.




