Ads Area

14 ஆதரவு வாக்குகளுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

 ( வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று (9) செவ்வாய்க்கிழமை  நிறைவேறியது.


சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்  எம்ஐஎம். மாஹிர் தலைமையில் மாதாந்த கூட்டம் பிரதேச சபை சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.


முன்னதாக , அண்மைய பேரிடரில் உயிர்நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிடம் ஆத்மார்த்தஅஞ்சலி செலுத்தப்பட்டது.


அவ்வயம் சபையின் அனைத்து 22 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.


அடுத்த வருடத்திற்கான இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான ஜிப்ரி, காலித், மொகமட், 


றிஸ்வ்கான், பஸீல், பௌமி, அப்னான், நயீம் ,  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வினோகாந், ஹாதிக் சுயேட்சை 2 உறுப்பினர் ஜெயச்சந்திரன், அகில இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சதானந்தா, சுயேட்சை 3 உறுப்பினர் நாசர், சுயேட்சை 1 உறுப்பினர் கபூர் ஆகிய 14 உறுப்பினர்கள் ஆதரவளித்தவர்களாவர்.


06உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான நளீம், நிலவ்பா, சௌபியா, நௌசா, றிபானா மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் டனோஜன் ஆகியோரே எதிர்த்தவர்களாவர்.


இருவர் வெளிநடப்பு செய்தனர். தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சஹீல் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நவாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தவராவர்.


அதன்படி தவிசாளர் மாஹிர் தலைமையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் நிறைவேறி இருக்கின்றது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe